கொரோனா சிகிச்சை பெற்றுவந்த உத்தரகண்ட் முதல்வர் குணமாகி வீடு திரும்பினார்!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த உத்தரகாண்ட் முதல்வர் தேவேந்திர சிங் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. குறிப்பாக முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடிய அரசியல்வாதிகள் பெரிய தலைவர்கள், நடிகர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் தேவேந்திர சிங் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கென்று தனி மருத்துவ குழு நியமிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. மருத்துவர் எம்என் பிஷ்ட் அவர்கள், சிறப்பு சிகிச்சையை முதல்வருக்கு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் முதல்வர் நிலை குறித்து தற்போது பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும், நோய் தொற்றுக்கான அறிகுறி காணப்படவில்லை எனவும் மருத்துவர் பிஷ்ட் அவர்கள் கூறியுள்ளார். இந்நிலையில் முதல்வர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி இல்லத்தில் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.