52மீ துளையிடபட்டுள்ளது… இன்று நல்ல செய்தி வரும்.! உத்தரகண்ட் முதல்வர் நம்பிக்கை.!

உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தது. இந்த சுழலில் கடந்த நவ.12ம் தேதி தொழிலாளர்கள் சுரங்கபணிகள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 பேரை மீட்கும் பணி 17-ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த சுரங்க பாதை தோண்டும் பணி முழுதாக முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்போது வரை மீட்பு பணி தொடர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இயந்திரத்தில் மீண்டும் மீண்டும் கோளாறுகள் ஏற்பட்டு வந்த நிலையில், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
அதாவது, மீட்புப் பணியின் போது ஆகர் இயந்திரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயந்திரத்திற்கு பதிலாக கைகளை கொண்டு துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள், முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
உத்தரகண்ட் சுரங்க விபத்து..! இறுதி கட்டத்தை எட்டிய மீட்புபணிகள்..!
இந்த நிலையில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க கிடைமட்டமாக குழாய்களை அனுப்பும் பணி மும்மரமாக நடந்து வருகிறது. சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கான்கிரீட் இடிபாடுகளை அகற்றும் பணி மூலம் புதிய நம்பிக்கை வந்துள்ளது. இதனால் விடியவிடிய சுரங்கத்தின் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்றது.
இதுவரை 52 மீட்டர் வரை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 முதல் 6 மீட்டர் வரை மட்டுமே தோண்ட வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. கடைசி குழாயை வெல்டிங் செய்து முடிக்கும் பணியும் நிறைவடைந்துள்ளதாகவும், இனி இந்த கடைசி குழாயை சுரங்கத்திற்குள் அனுப்பும் பணி மட்டுமே எஞ்சியுள்ளது எனவும் மீட்புப்படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸை ஒழிப்பது தான் ஒரே வழி.! இஸ்ரேல் பயணம் குறித்து எலான் மஸ்க் கருத்து.!
எனவே, தொழிலாளர்களை இன்று இரவுக்கு மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதனால், சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை விரைவில் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் மீட்புக்குழுவினர் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர். தொழிலாளர்களை மீட்பதற்காக மேலிருந்து கீழாக துளையிட்டு வருகின்றனர். மேலும், சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு குழாய் வழியாக ஆக்சிஜன், உணவு மற்றும் நீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சுரங்கப்பாதை இடிபாடுகளில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்பது குறித்து இன்று மாலை நல்ல செய்தி வரும் என உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். தொழிலாளர்களை மீட்க இடிபாடுகளின் பக்கவாட்டில் 52 மீட்டர் வரை தோண்டப்பட்டுவிட்டது. இன்னும் சில மீட்டர்கள் மட்டுமே உள்ளன. அதன்பின் அனுப்பப்பட்டு தொழிலாளர்கள் மீட்கப்படவுள்ளன எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…
February 23, 2025
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025