நான் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்று, அங்கு சில மக்களை சந்தித்தேன். முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் எந்த பணியும் செய்யவில்லை என்று அவர்கள் புகார் கூறியுள்ளனர்.
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இரண்டு நாள் பயணமாக உத்தரகாண்ட் சென்றுள்ளார். அங்கு சென்ற மணிஷ் சிசோடியா, உத்தரகாண்ட் முதல்வர் குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘நான் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்று, அங்கு சில மக்களை சந்தித்தேன். முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் எந்த பணியும் செய்யவில்லை என்று அவர்கள் புகார் கூறியதாகவும், அவர்கள் அவரை பூஜ்ஜிய பணி தலைவர் என்று தான் அழைக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
2022 உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆம் ஆத்மி கட்சி அறிவித்த சில நாட்களில் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உத்தரகாண்ட் மாநில அமைச்சர் மதன் கவுசிக் ஜி, ராவத் தலைமையிலான உத்தரகாண்ட் அரசு மேற்கொண்ட அபிவிருத்திப்பணிகள் குறித்து விவாதிப்பதற்கான தனது சவாலை ஏற்றுக் கொண்டது தனக்கு மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உத்தரகாண்ட் அமைச்சர் மதன் கவுசிக் ஜி இந்த சவாலை ஏற்றுக் கொண்டதோடு, அவரது அரசாங்கத்தால் செய்யப்பட்ட அபிவிருத்திப் பணிகளைப் பற்றி விவாதிக்க முன் வந்தது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வாய்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். கலந்துரையாடலுக்கான இடத்தையும் நேரத்தையும் என்னிடம் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…