உத்தரகாண்ட் விபத்து : 200 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து…20 பேர் பலி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

uttarakhand bus Accident

உத்தராகண்டம்: இன்று கர்வால் மோட்டார்ஸ் பேருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அல்மோராவில் உள்ள மார்ச்சுலா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது,  உத்தரகாண்ட் மாநிலத்தின் குபி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ராம்நகரில் உள்ள பவுரி-அல்மோரா எல்லையில் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

விபத்து ஏற்பட்ட போது பேருந்தில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அத்துடன் ஆம்புலன்ஸ்க்கும் தகவலை தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்க அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விபத்தில் சிக்கி இருப்பவர்களையும் , உயிரிழந்தவர்களின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த விபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது, ஆனால் விபத்து நடந்த போது பேருந்தில் குறைந்தது 40 பயணிகள் இருந்ததால் எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிலர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி  தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள  பக்கத்தில் கூறியதாவது “அல்மோரா மாவட்டத்தின் மார்ச்சுலாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான பேருந்து விபத்தில் பயணிகளின் உயிரிழப்புகள் குறித்து வெளியான வருத்தமான செய்தியை நான் பார்த்தேன். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் நிர்வாகம் மற்றும் SDRF குழுக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல விரைவாக செயல்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால், பலத்த காயமடைந்த பயணிகளை விமானத்தில் ஏற்றிச் செல்லவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்