கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமைப்புசாரா தொழிலில் ஈடுபடுவோர்கள் அதாவது, தினக்கூலியாக வேலை செய்து வந்தவர்களின் வாழ்வாதாரமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் சொந்த தொகுதியியான உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பசியை போக்க குழந்தைகள் புல்லை உப்பு கொண்டு சாப்பிட்ட அவல நிலை ஏற்பட்டுள்ளது.
வாரணாசி தொகுதியில் உள்ள கோய்ரிபுர் எனுமிடத்தில் கட்டிட வேலையை நம்பி தினக்கூலியாக வேலை செய்யும் குடும்பங்கள் இருந்து வருகின்றன.அதில், ராணி, பூஜா, விஷால், நீர்ஹூ, சோனி, கோலு ஆகிய குழந்தைகள் உணவின்றி தவித்துள்ளனர். அவர்கள் குடும்பத்தினர் கட்டட வேலையில் ஈடுபட்டு வந்தவர்கள். ஆனால், தற்போது வேலையின்றி இருப்பதால், உணவின்றி அந்த குடும்பங்கள் தவித்து வந்துள்ளன.
இதில் அந்த குழந்தைகள், ஊரடங்கின் முதல் நாள் அன்று இறந்தவரின் இறுதி சடங்கு நடைபெற்ற வீட்டில் சாப்பாடு சாப்பிட்டுள்ளார். இரண்டாம் நாள் தோட்டத்தில் உருளைக்கிழங்கு பறித்து சாப்பிட்டுள்ளனர். மூன்றாம் உணவின்றி, ஆடு மாடுகளுக்கு வழங்கப்படும் புல்லை உப்பு, தண்ணீர் கொண்டு சாப்பிட்டுள்ளனர்.
இந்த அவல நிலையினை பத்திரிக்கை நிருபர் அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு, அந்த மக்களுக்கு தற்போது 15 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொடுத்து, தற்போது அம்மக்களின் பசி போக்கப்பட்டுள்ளது. மேலும் தேவை என்றால், அரசு அதிகாரிகள் செய்துகொடுப்பதாக உறுதியளித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…