உத்தரபிரதேசத்தில் வார இறுதி ஊரடங்கு இனி ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்படும்.!

உத்தரபிரதேச மாநிலத்தில் இனி வார இறுதி ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படும்.
உத்தரபிரதேச மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு சனிக்கிழமைகளில் இருந்த நிலையில், தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சகம் அன்லாக் 4.0 க்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின்னர் இந்த புதிய நெறிமுறை அமல்படுத்தப்படுகிறது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வார இறுதி ஊரடங்கை சனிக்கிழமை பின்பற்றபடும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது 4 -ஆம் கட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின்னர், சனிக்கிழமைகளில் ஊரடங்கை நீக்கி அதற்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தொடர முடிவு செய்துள்ளது.
சனிக்கிழமைகளில் ஊரடங்கு அகற்றவது மட்டுமல்லாமல், மார்க்கெட் இப்போது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025