அதிர்ச்சி: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அமைச்சர் உயிரிழப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ஹனுமன் மிஷ்ரா, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2 லட்சத்திற்கு மேலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளது.
கொரோனா பரவலின் இரண்டாம் அலையில் முதல்வர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ஹனுமன் மிஷ்ரா உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, லக்னோவில் உள்ள சஞ்ஜய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அமைச்சர் ஹனுமான் மிஷ்ரா, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு அமைச்சர் உயிரிழந்துள்ளது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.