உத்தரப்பிரதேச மாநில அரசு அதிரடி..!

Default Image

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு அரசு பங்களா ஒதுக்கியது குறித்து விசாரணை நடத்த உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச முதலமைச்சராக மாயாவதி இருந்தபோது லக்னோ லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள ஆறாம் எண் பங்களாவில் அவர் குடியிருந்தார்.

முதலமைச்சராக இருந்தவர்கள் பதவி இறங்கிய உடனேயே அரசு பங்களாக்களைக் காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மால் அவென்யூ, 13ஏ இல்லத்தில் இருந்து மாயாவதி வெளியேறும்படி அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு மாயாவதி எழுதியுள்ள கடிதத்தில் மால் அவென்யூ 13ஏ இல்லம் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்சிராமின் நினைவில்லமாக உள்ளதாகவும், தான் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள ஆறாம் எண் பங்களாவிலேயே குடியிருந்து வருவதாகவும் விளக்கம் அளித்தார்.

அந்த பங்களா ரேகா தன்வீர் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆவணங்களில் உள்ளதால், இதை மாயாவதி பெற்றதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி உத்தரப்பிரதேச அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news
TN RAIN
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu
Andhra woman receives human remains