உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 255 எம்எல்ஏக்களை வைத்துள்ளது. எதிர்க்கட்சியாக சமாஜ்வாடிகட்சி செயல்பட்டு வருகிறது அக்கட்சி வசம் 111 எம்எல்ஏக்கள் உள்ளனர். அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் வரும் ஏப்ரல் மாதத்துடன் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, எம்எல்ஏக்கள் எண்ணிக்கை கொண்டு இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர்.
அதில், பாஜக சார்பில், ஆர்பிஎன் சிங், சுதன்ஷு திரிவேதி, சவுத்ரி தேஜ்வீர் சிங், சாதனா சிங், அமர்பால் மவுரியா, சங்கீதா பல்வந்த், நவீன் ஜெயின் ஆகிய 7 பேரை அறிவித்தது. சமாஜ்வாடி தரப்பில் அலோக் ரஞ்சன், ஜெயா பச்சன், ராம்ஜிலால் சுமன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனால் தேர்தல் நடைபெறாது என்ற நிலையில் திடீரென சஞ்சய் சேத்தை புதிய வேட்பாளராக அறிவித்தது பாஜக. இதனால் 10 இடங்களுக்கு 11 வேட்பாளர்கள் உள்ளதால், தற்போது மாநிலங்களவை தேர்தல் உத்திர பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் சில எம்எல்ஏக்கள் வரவில்லை என்று கூறப்பட்டது. இதனால் சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏக்கள் சிலர் மாற்றி வாக்களிக்கும் சூழல் உருவாகலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தான். தற்போது, சமாஜ்வாடி கட்சி சட்டமன்ற தலைமை கொறடா மனோஜ் பாண்டே தற்போது தனது கோரோடா பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை கடிதம் வாயிலாக சமாஜ்வாடி கட்சி தலைமை அனுப்பியுள்ளார். தனது ராஜினாமாவை கட்சி தலைமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து புதிய கொறடா விரைவில் அறிவிக்கப்படுவார் என சமாஜ்வாடி தலைமை தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநில அமைச்சர் தயாசங்கர் சிங் மனோஜ் பாண்டே கூறுகையில், மனோஜ் பாண்டே எப்போதுமே சனாதன தர்மத்தை ஆதரிப்பவர். அயோத்தி ராமர் கோயிலை அனைவரும் தரிசனம் செய்ய வேண்டும் என முன்மொழிவு செய்ததை அவர் வரவேற்றார் என்று குறிப்பிட்டார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…