பரபரக்கும் உ.பி தேர்தல்.! எதிர்க்கட்சி கொறடா ‘திடீர்’ ராஜினாமா.!

Samajwadi Party Manoj Pandey

உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 255 எம்எல்ஏக்களை வைத்துள்ளது. எதிர்க்கட்சியாக சமாஜ்வாடிகட்சி செயல்பட்டு வருகிறது அக்கட்சி வசம் 111 எம்எல்ஏக்கள் உள்ளனர். அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் வரும் ஏப்ரல் மாதத்துடன் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, எம்எல்ஏக்கள் எண்ணிக்கை கொண்டு இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர்.

Read More – 3 மாநிலங்கள்… 15 எம்.பிக்கள்.. இன்று மாநிலங்களவை தேர்தல்..

அதில், பாஜக சார்பில்,  ஆர்பிஎன் சிங், சுதன்ஷு திரிவேதி, சவுத்ரி தேஜ்வீர் சிங், சாதனா சிங், அமர்பால் மவுரியா, சங்கீதா பல்வந்த், நவீன் ஜெயின் ஆகிய 7 பேரை அறிவித்தது. சமாஜ்வாடி தரப்பில் அலோக் ரஞ்சன், ஜெயா பச்சன், ராம்ஜிலால் சுமன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனால் தேர்தல் நடைபெறாது என்ற நிலையில் திடீரென சஞ்சய் சேத்தை புதிய வேட்பாளராக அறிவித்தது பாஜக. இதனால் 10 இடங்களுக்கு 11 வேட்பாளர்கள் உள்ளதால், தற்போது மாநிலங்களவை தேர்தல் உத்திர பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது.

Read More  – பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக பயணம்… திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை முழு விவரம்…

ஏற்கனவே, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் சில எம்எல்ஏக்கள் வரவில்லை என்று கூறப்பட்டது. இதனால் சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏக்கள் சிலர் மாற்றி வாக்களிக்கும் சூழல் உருவாகலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தான். தற்போது,  சமாஜ்வாடி கட்சி சட்டமன்ற தலைமை கொறடா மனோஜ்  பாண்டே தற்போது தனது கோரோடா பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை கடிதம் வாயிலாக சமாஜ்வாடி கட்சி தலைமை அனுப்பியுள்ளார். தனது ராஜினாமாவை கட்சி தலைமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து புதிய கொறடா விரைவில் அறிவிக்கப்படுவார் என சமாஜ்வாடி தலைமை தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநில அமைச்சர் தயாசங்கர் சிங் மனோஜ் பாண்டே கூறுகையில், மனோஜ் பாண்டே எப்போதுமே சனாதன தர்மத்தை ஆதரிப்பவர். அயோத்தி ராமர் கோயிலை அனைவரும் தரிசனம் செய்ய வேண்டும் என முன்மொழிவு செய்ததை அவர் வரவேற்றார் என்று குறிப்பிட்டார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்