ரூ.9600 கோடி மதிப்பிலான முக்கிய திட்டங்கள்;தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
உத்தரபிரதேசம்:கோரக்பூரில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,இன்று,கிழக்கு உ.பி.யின் மிக முக்கியமான நகரங்கள் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரில் ரூ.9600 கோடி மதிப்பிலான 3 பெரிய திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும்,பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
PM Narendra Modi inaugurates development projects in Gorakhpur. Governor Anandiben Patel and CM Yogi Adityanath also present at the event. pic.twitter.com/v6bKidTzhl
— ANI UP (@ANINewsUP) December 7, 2021
கோரக்பூரில் இன்று பிரதமர் தொடங்கி வைத்துள்ளதில் 3 முக்கிய திட்டங்கள்:
1. ஹிந்துஸ்தான் உர்வரக் ரசயான் லிமிடெட்டின் (HURL) புதிதாக கட்டப்பட்ட உர ஆலை.
2. 300 படுக்கைகள் மற்றும் 14 ஆபரேஷன் தியேட்டர்களுடன் கூடிய அதிநவீன கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை.
3. BRD மருத்துவக் கல்லூரியில் உள்ள ICMRன் பிராந்திய அலகு பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் (RMRC) ஒரு உயர் தொழில்நுட்ப ஆய்வகம்.
கோரக்பூர் உர ஆலையானது ரூ.8,603 கோடி மதிப்பில், ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் வேம்பு பூசப்பட்ட யூரியாவை உற்பத்தி செய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தத் திட்டம் விவசாயிகளின் வாழ்வில் செழிப்பைக் கொண்டு வருவது மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் 20,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
மறுபுறம் ரூ.1,011 கோடி மதிப்பிலான கோரக்பூர் எய்ம்ஸ், கிழக்கு உத்தரபிரதேசத்தின் மக்களுக்கு மட்டுமல்ல, பீகார், ஜார்கண்ட் மற்றும் நேபாளத்தில் உள்ள உலகத் தரம் வாய்ந்த சுகாதார வசதிகளுடன் கூடிய பெரும் பகுதி மக்களுக்கும் பயனளிக்கும் என்றும்,
அதேபோல், பி.ஆர்.டி., மருத்துவக் கல்லுாரியில்,மண்டல மருத்துவ ஆராய்ச்சி மையம், உடல் திசை நோய்கள்(vector-borne diseases) நோய்களுக்கான பரிசோதனை மற்றும் ஆராய்ச்சியை எளிதாக்கும். இந்த ஹைடெக் ஆய்வகம், பெரு நகரங்களைச் சார்ந்து இருப்பதைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.