மாஸ்க் அணியாத ஆட்டுக்குட்டியை கைது செய்த உத்திரபிரதேச போலீசார்!
மாஸ்க் அணியாத ஆட்டுக்குட்டியை கைது செய்த உத்திரபிரதேச போலீசார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், மக்கள் தங்களை இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், உத்திர பிரதேசத்தில், கான்பூர் மாவட்டத்தில், மாஸ்க் அணியாமல் சென்ற ஆட்டுக்குட்டி ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து ஆட்டின் உரிமையாளர் காவல்நிலையம் சென்று, ஆட்டை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து கருது தெரிவித்த காவல் அதிகாரி, நாய்கள் மாஸ்க் அணியும் போது ஆடுகள் ஏன் மாஸ்க் அணிய கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.