சர்ச்சையை கிளப்பிய உத்திர பிரதேச மதிய உணவு விவகாரம்! உண்மை நிலை என்ன?!

Published by
மணிகண்டன்

ஆகஸ்ட் 23-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிடுகிறார். அந்த வீடியோவில் உத்தரப்பிரதேசத்தின் இருக்கும் மிசாபூர் என்கிற மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவாக ரொட்டியும் அதனுடன் உப்பு கொடுக்கப்படுகிறது. இதனை வீடியோவாக பதிவிட்டு அதில் உத்தரபிரதேச அரசைடேக்  டேக் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.

இதனை அடுத்து உத்தரபிரதேச அரசானது, அந்த நபர் மீது, ‘உத்தரபிரதேச அரசு மீது அவதூறு பரப்பும் நோக்கில் வீடியோ வெளியிடுதல்.’ எனும் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளது.  ‘மேலும், ‘அவர் உள்ளூர் பத்திரிகையில் வேலை செய்து விட்டு ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு வீடியோவை பதிவிட்டு, சமூக வலைத் தளம் மூலம் அவதூறு பரப்பும் நோக்கில் பதிவிட்டுள்ளார். எனவும் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவரின் பெற்றோர் ஒருவரான, பவன் ஜைஸ்வால் என்பவர் கூறுகையில், ‘இங்கு மதிய உணவாக ரொட்டி மற்றும் உப்பு கொடுக்கப்படும். அல்லது அரிசியுடன் சேர்த்து உப்பு கொடுக்கப்படும். எப்போதாவது பால் கொடுக்கப்படும். ஒருபோதும் வாழைப்பழங்கள் கொடுக்கப்படுவது இல்லை.’ என கூறினார். மேலும் அந்த வீடியோவில் இருப்பது உண்மைதான் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உத்தரபிரதேச அரசு விதியின்படி, தினமும் அரசு பள்ளியில் பயிலும் சுமார் 1.5 லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு 450 கலோரி கொண்ட உணவு வழங்கப்பட வேண்டும். அதில் 12 கலோரி அளவு புரோட்டின் இருக்க வேண்டும். அரிசி ரொட்டி காய்கறிகள் பழங்கள் பால் என அனைத்தும் வாரத்திற்குள் மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

’15 வருட காதல்… அடுத்த மாதம் கல்யாணம்’ வருங்கால கணவர் ஆண்டனியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்!

சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம்பெரியதாக எடுத்துக்…

17 minutes ago

மக்களே கவனம்! இந்த மாவட்டங்களில் 4 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : வங்கக்கடலில் புயலாக உருவெடுக்க உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை…

17 minutes ago

சிறகடிக்க ஆசை சீரியல்-ரோகினியை வீட்டை விட்டு துரத்தும் மனோஜ், விஜயா..!

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 27] எபிசோடில் மீனாவை துரத்தும் நபர் ,பதட்டத்தில் வித்யா வீட்டுக்குள் செல்லும் மீனா..…

21 minutes ago

அதானியை சிறையில் அடைக்க வேண்டும்! ராகுல் காந்தி ஆவேசம்!

டெல்லி : அதானி குழுமம் மீதும் கெளதம் அதானி மீதும் அமெரிக்க வழக்கறிஞர் குழு குற்றசாட்டை முன்வைத்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.…

21 minutes ago

“உதயநிதி பேரீச்சம் பழம் போன்றவர். ஆனால்,” வைரமுத்து பகிர்ந்த ஸ்வீட் சீக்ரெட்!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் முன்பு திரைத்துறையில்…

58 minutes ago

சைலன்ட்டா சம்பவம் செய்த தனுஷ்! நயன்தாரா,நெட்ஃபிலிக்ஸுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை : கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில், நானும்…

59 minutes ago