சர்ச்சையை கிளப்பிய உத்திர பிரதேச மதிய உணவு விவகாரம்! உண்மை நிலை என்ன?!
ஆகஸ்ட் 23-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிடுகிறார். அந்த வீடியோவில் உத்தரப்பிரதேசத்தின் இருக்கும் மிசாபூர் என்கிற மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவாக ரொட்டியும் அதனுடன் உப்பு கொடுக்கப்படுகிறது. இதனை வீடியோவாக பதிவிட்டு அதில் உத்தரபிரதேச அரசைடேக் டேக் செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.
இதனை அடுத்து உத்தரபிரதேச அரசானது, அந்த நபர் மீது, ‘உத்தரபிரதேச அரசு மீது அவதூறு பரப்பும் நோக்கில் வீடியோ வெளியிடுதல்.’ எனும் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளது. ‘மேலும், ‘அவர் உள்ளூர் பத்திரிகையில் வேலை செய்து விட்டு ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு வீடியோவை பதிவிட்டு, சமூக வலைத் தளம் மூலம் அவதூறு பரப்பும் நோக்கில் பதிவிட்டுள்ளார். எனவும் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவரின் பெற்றோர் ஒருவரான, பவன் ஜைஸ்வால் என்பவர் கூறுகையில், ‘இங்கு மதிய உணவாக ரொட்டி மற்றும் உப்பு கொடுக்கப்படும். அல்லது அரிசியுடன் சேர்த்து உப்பு கொடுக்கப்படும். எப்போதாவது பால் கொடுக்கப்படும். ஒருபோதும் வாழைப்பழங்கள் கொடுக்கப்படுவது இல்லை.’ என கூறினார். மேலும் அந்த வீடியோவில் இருப்பது உண்மைதான் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உத்தரபிரதேச அரசு விதியின்படி, தினமும் அரசு பள்ளியில் பயிலும் சுமார் 1.5 லட்சம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு 450 கலோரி கொண்ட உணவு வழங்கப்பட வேண்டும். அதில் 12 கலோரி அளவு புரோட்டின் இருக்க வேண்டும். அரிசி ரொட்டி காய்கறிகள் பழங்கள் பால் என அனைத்தும் வாரத்திற்குள் மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும்.
This clip is from a @UPGovt school in east UP’s #Mirzapur . These children are being served what should be a ‘nutritious’ mid day meal ,part of a flagship govt scheme .On the menu on Thursday was roti + salt !Parents say the meals alternate between roti + salt and rice + salt ! pic.twitter.com/IWBVLrch8A
— Alok Pandey (@alok_pandey) August 23, 2019