முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகானின் பெயரை சாலைக்கு வைத்த உத்தரபிரதேச அரசு.!

Default Image

சேத்தன் சவுகானை நினைவுகூறும் விதமாக அவர் பெயரை ஒரு சாலைக்கு வைக்கவுள்ளதாக உத்தரபிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் மற்றும் கிரிக்கெட் வீரருமான சேத்தன் சவுகான் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குருகிராமில் உள்ள மேடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி உயிரிழந்தார். சேத்தன் சவுகான், சிவில் பாதுகாப்பு மற்றும் பிராந்தியா ரக்ஷக் தால் போன்றவற்றின் உத்தரபிரதேச அமைச்சராக இருந்தார். இவர் 1970-களில் கிரிக்கெட் அணியில் சுனில் கவாஸ்கருடன் தொடக்க ஆட்டக்காரரான சவுகான் களம் இறங்குவார்.

இந்நிலையில், சேத்தன் சவுகானை நினைவுகூறும் விதமாக அவர் பெயரை ஒரு சாலைக்கு வைக்கவுள்ளதாக உத்தரபிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா அறிவித்துள்ளார். மேலும், சேத்தனின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், அவர் பெயரை சாலைக்கு வைப்பதன் மூலம் தற்போது இருக்கிற மற்றும் வருங்கால சந்ததிகளுக்கு அவரை நினைவு கூறும் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, சேத்தன் சவுகான் மறைவு அம்மாநிலம் காட்டிய அலட்சியத்தால் உட்பட்டது என்று ஒருபக்கம் புகார்கள் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்