உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாள் துக்க அனுசரிப்பு அறிவிப்பு.
உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமாகிய கல்யாண் சிங் அவர்கள் ஏற்கனவே ஜூலை மாதம் நான்காம் தேதி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு, சிறுநீரக கோளாறு, இதயக்கோளாறு மற்றும் நரம்பியல் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று உடல்நிலை மோசமடைந்ததால் இவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது.
செப்ஸிஸ் மற்றும் உறுப்பு செயலிழப்பு காரணமாக இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக உத்திரபிரதேச மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…