பிரதமர் மோடியுடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று சந்திப்பு!
- டெல்லியில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிரதமரை சந்திக்கவுள்ளார்.
- முதல்வர் யோகி நண்பகல் 12 மணியளவில் பாஜக தேசிய தலைவரையும் சந்திக்க உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று அவர் டெல்லி சென்றிருந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருந்தார். இதனையடுத்து பிரதமர் மோடி அவர்களது இல்லத்தில் இன்று 10:45 அளவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்து பேச உள்ளார்.
அதன்பின் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அவர்களையும் மதியம் 12 மணியளவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது உத்தர பிரதேச மக்களுக்கு சில கருத்து மாறுபாடுகள் இருப்பதால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பாஜக அரசில் மந்திரி சபை மாற்றியமைக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.