உத்திரபிரதேசம் கொரோனா பாதித்த மாநிலம் என அம்மாநில முதல்வர் அறிவிப்பு..!
உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்திரப்பிரதேசம் மாநிலம் கொரோனா பாதித்த மாநிலமாக அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் தலைநகர் டெல்லியில் அதிகமான பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 781 பேருக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்திரப்பிரதேசம் மாநிலம் கொரோனா பாதித்த மாநிலமாக அறிவித்துள்ளார். இதுபற்றிய அரசாணையில், இந்த அறிவிப்பானது வரும் 2022-ஆம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.