உத்தரபிரதேசம் : 37,000 ஒலிபெருக்கிகள் அகற்றம் ; 55,000 ஒலிபெருக்கிகள் ஒலி அளவு குறைப்பு…!

Default Image

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மசூதிகள் மற்றும் சில மத வழிபாட்டுத் தலங்களில் அதிக அளவில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறி கடந்த சில நாட்களாகவே சில சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதி இன்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒலிபெருகிகளுக்கான ஒலி அளவு குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே அதிக அளவிலான ஒலிபெருக்கிகளில் ஒலி அளவு குறைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுவரும் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது இது குறித்து தெரிவித்துள்ள உத்திரபிரதேச காவல்துறை சட்டம் ஒழுங்கு இயக்குனர் பிரசாந்த் குமார் அவர்கள் பேசுகையில், இதுவரை உத்தரபிரதேச மாநிலத்தில் 37 ஆயிரத்துக்கும் அதிகமான ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், 55 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஒலிபெருக்கிகளில் ஒலி அளவு குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் அந்தந்த மத வழிபாட்டுத் தலங்களின் ஒத்துழைப்புடன் செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் அரசாங்கத்துடன் இருக்கிறார்கள் என தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்