உத்தர பிரதேசம் : 258 ஆமைக்குட்டிகள் பறிமுதல் – 3 பேர் கைது ..!

உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மூவர் 258 ஆமைக்குட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த ரவீந்திர குமார், சவுரப் காஷ்யப், அர்மான் அகமது ஆகிய 3 பேர் நேற்று மாலை 3 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். காரணம் அவர்கள் மூவரும் 258 ஆமைக்குட்டிகளை வைத்திருந்துள்ளனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த சில மீனவர்களுக்கு பணம் கொடுத்து ஆமைகளை பிடிக்கச் சொல்லி, அவற்றைப் பிற மாநிலங்களில் இவர்கள் அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்துள்ளது.
எனவே, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த சிறப்பு அதிரடி படை போலீசார் தகவல் அறிந்து மூவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடமிருந்து 2,460 ரூபாய் ரொக்கம் மற்றும் 3 செல்போன்கள் அவர்களின் பான் கார்டு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025