மரியாதையான வார்த்தையை பயன்படுத்துங்கள்.. போராட்டத்தில் ஈடுபட்ட பாலியல் தொழிலாளர்கள்…!

prostitute

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த அறிக்கையில் ​​ஐ.நா  சிறப்பு அறிக்கையாளர் பயன்படுத்திய சொற்களால் பல்வேறு பெண்கள் உரிமை அமைப்பு மற்றும் பாலியல் தொழிலாளர்கள் அமைப்புகளுடன் இணைந்து 3,600 க்கும் மேற்பட்ட நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான ​​ஐ.நா  சிறப்பு அறிக்கையாளர் தாக்கல் செய்த அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.

ஜூன் மாதம் அதன் 56-வது அமர்வில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைக்கும் இடையிலான தொடர்பை ஆராய இது முன்மொழிகிறது. எனவே, விபச்சாரத்திற்கும்,  பெண்களுக்கு எதிரான வன்முறைக்கும் இடையிலான உறவை நன்கு புரிந்துகொள்வதற்கும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் உணர்வைப் பேணுவதற்கும், திறம்பட பாதுகாப்பதற்கும் மாநிலங்கள் எடுக்க வேண்டிய விதிமுறைகள், அணுகுமுறைகள் மற்றும் செயல்களைத் தெளிவுபடுத்துவதற்கும் ​​ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அறிக்கை உதவுகிறது.

​​ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் தாக்கல் செய்த அறிக்கையில் “பாலியல் தொழிலாளி” என்ற வார்த்தையை பயன்படுத்தாமல்  “விபச்சார பெண்கள்” என இழிவான சொற்களை பயன்படுத்தியதாக  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஐநா சிறப்பு அறிக்கையாளர் உள்ளிட்டோரிடம் சமர்ப்பித்த மனுவில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புக்கள்  தெரிவித்தனர்.

Budget 2024: சூரிய மேற்கூரை வீடுகளுக்கு இலவச மின்சாரம்!

இந்த விவகாரம் தொடர்பாக Sex Workers and Allies South Asia (SWASA) மனுவை சமர்ப்பித்த வழக்கறிஞர்கள் விருந்தா குரோவர், ஆர்த்தி பாய் ஆகியோர் கூறியதாவது, ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் செயல், பாலியல் தொழிலாளர்கள் மற்றும் உரிமை கோரும் குழுக்கள் உள்ளிட்டோர் போராடும் உரிமைக்கு விரோதமானது என்று கூறியுள்ளனர்.  பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கும் வகையில் ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் வார்த்தைகள் உள்ளது.

அவர்களது உரிமைகள், மரியாதை, பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிராக இது வழிவகுக்காது என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறியுள்ளனர். இதுபோன்று ஸ்வாசாவின் உறுப்பினர் மீனா சேசு கூறியதாவது, பாலியல் தொழிலாளர்கள் என்ற மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். மனித கடத்தல், பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் வேலை போன்ற முரண்பாடான சொற்களை தவிர்க்க வேண்டும் என்றார்.

மேலும், 1,50,000க்கும் மேற்பட்ட பெண், மாற்றுத்திறனாளி மற்றும் ஆண் பாலியல் தொழிலாளர்களைக் கொண்ட பான்-இந்திய இணையதளமான National Network of Sex Workers (NNSW), ஐநா சிறப்பு அறிக்கையாளர் பயன்படுத்திய வார்த்தைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உச்சநீதிமன்றம் (SCI) பாலின ஸ்டீரியோடைப்(Stereotype) எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு அறிக்கையை வெளியிட்டது. தீங்கு விளைவிக்கும் பாலின ஸ்டீரியோடைப்களைத் தவிர்ப்பதற்கான வழிகாட்டுதலை அது வழங்குகிறது. மேலும் விபச்சாரி என்ற வார்த்தையை ‘பாலியல் தொழிலாளி’ என்று மாற்ற பரிந்துரைக்கிறது என்றும் NNSW உறுப்பினர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்