இந்த வருடம் மட்டும் சுமார் 82,000 மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிப்பதற்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஆண்டும் இவ்வளவு எண்ணிக்கையில் அமெரிக்கா விசா வழங்கியது இல்லை.
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த வருடம் அதிக அளவில் மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் விசா வழங்கியுள்ளது. படிப்புக்கு அமெரிக்கா செல்ல விருப்பப்படும் மாணவர்களுக்கு விசா வழங்க கடந்த மே மாதம் முதல் முன்னுரிமை கொடுத்திருத்தது.
அதன் படி இந்தியாவில் உள்ள தலைமை அமெரிக்க தூதரகாமான டெல்லி மற்றும் துணை தூதரங்கள் அமைந்திருக்கும் சென்னை, ஹைதிராபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களிலும் இந்த ஆண்டு 82,000 மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
இது போல எந்த வருடமும் இத்தனை மாணவர்களுக்கு விசா வழங்கியது கிடையாது. இரு நாட்டின் உறவை இந்த முயற்சி பலப்படுத்தும். எதிர்கால உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இந்த முயற்சி பெரும் பக்கபலமாக இருக்கும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பாட்ரிசியா லசினா தெரிவித்தார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…