அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ்,இந்தியாவுக்கு 25 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்குவது குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக,இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி,தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால்,தற்போது தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது.
இதற்கிடையில்,உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் திட்டத்தின்படி, 2.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வெளிநாடுகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில்,அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ்,ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவைத் தெரிவிக்க,பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது,25 மில்லியன்(2.5 கோடி )டோஸ் உயிர்காக்கும் கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்புவதாக உறுதியளித்தார்.
மேலும்,கொரோனா தடுப்பூசி உற்பத்தி உள்பட இரு நாடுகளுக்கு இடையேயான சுகாதார வினியோக சங்கிலியை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் பற்றி கமலா ஹாரிஸ்,பிரதமர் மோடியிடம் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…