குடும்பத்துடன் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்.!!
நான்கு நாள் பயணமாக மனைவி உஷா, குழந்தைகளுடன் இந்தியா வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்.

டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி அளவில் டெல்லி விமானம் நிலையம் வந்தடைந்தார். 4 நாள்கள் அரசுமுறை பயணமாக வந்துள்ள அவர்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விமானப்படை அதிகாரிகள் வரவேற்றனர்.
அவரது குழந்தைகள் இந்திய பாரம்பரிய உடையை அணிந்திருந்தனர். அவருடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (NSC) தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான மூத்த இயக்குநர் ரிக்கி கில் உட்பட அமெரிக்க அரசு அதிகாரிகள் குழுவும் வந்தடைந்தனர்.
இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் நடைபெறும் இரவு விருந்தில் ஜே.டி. வான்ஸ் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுடன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் வருகையை முன்னிட்டு, டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாலை 6:30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் புவிசார் அரசியல் தொடர்பான பிரச்சினைகளை பற்றி விவாதிக்க உள்ளார். மோடி மற்றும் டிரம்ப் ஆகியோர் பிப்ரவரி 2025 இல் வாஷிங்டனில் நடந்த பேச்சுவார்த்தைகளின்போது, 2030 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக உயர்த்துவதற்கு ஒரு “மிஷன் 500” இலக்கை அறிவித்தனர். அதனைத்தொடர்ந்து, வான்ஸின் தற்போது இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.