இந்தியாவிற்கு ரூ.27,00,00,000 நிதியுதவி அறிவித்த அமெரிக்கா.!
கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.27 கோடி நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவி தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்கா, இத்தாலி , இங்கிலாந்து ரஷ்யா உள்ளது. கொரோனா பதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 13,85,893 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.27 கோடி நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்ட பணிகளுக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.