இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு வலுவாக உள்ளது! அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்….

Blinken

2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெறும் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை, ஐந்தாவது முறையாக இன்று நவம்பர் 10ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இருநாட்டு நல்லுறவு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று காலை 10 மணி அளவில் டெல்லியில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

அதில் பேசிய மெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு எப்போதும் வலுவானது. இந்தியாவில் இருப்பது எப்பொழுதும் அற்புதமானது என்றார். நமது பொருளாதாரத்தை மேலும் வளர்ச்சியடைய செய்வதற்கும், பொருளாதார வாய்ப்பை விரிவுபடுத்தும் போது நமது சமூகங்களை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும் புதுமையை ஒன்றாக பயன்படுத்துகிறோம்.

அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் காத்திருக்கிறோம்.! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

நமது நாடு முழுவதும் முன் எப்போது இல்லாத வகையில், முதலீடுகள் மற்றும் விண்வெளியில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுத் திட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

அது மட்டும் இல்லாமல், புதிய கல்வி பரிமாற்றங்கள் குறித்து ஆராய்வது, இரு நாடுகளுக்கு இடையே பயணத்தை எளிதாக்குவதற்கான வழிகளை உருவாக்குவது. விசா காத்திருப்பு நேரத்தைக் குறைப்பது, இந்தியர்களும் அமெரிக்கர்களும் ஒன்றாகப் படிக்கும்போது, ஒன்றாகப் பணியாற்றும்போதும் ஒன்றாக ஒத்துழைக்கும்போது மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்படும் என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்