அமெரிக்க அதிபர் தேர்தல்: வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.!

Default Image

அமேரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் தேர்தலானது கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது . அதில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர் . இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானதை அடுத்து ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் வரலாற்றிலையே 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார் ஜோ பைடன் . மேலும் துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார் .

இருவருக்கும் பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . அதில் உங்களது அற்புதமான வெற்றிக்கு வாழ்த்துக்கள் . நீங்கள் துணை அதிபராக இருந்த போது இந்தோ-அமெரிக்கா உறவுகளை வலுப்படுத்துவதில் உங்கள் பங்களிப்பு முக்கியமானதாகவும் , விலைமதிப்பற்றதாகவும் இருந்தது . இந்திய-அமெரிக்க உறவுகளை அதிக உயரத்திற்கு கொண்டு செல்ல மீண்டும் ஒரு முறை தங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக நான் எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறி ஜோ பைடன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .

அதனையடுத்து துணை அதிபராக வெற்றி பெற்றகமலா ஹாரிஸிற்கு வாழ்த்துக்களை தெரிவித்த மோடி , உங்களது வெற்றி உங்கள் உறவினர்களுக்கு மட்டுமின்றி அனைத்து இந்திய- அமெரிக்கர்களுக்கும் மகத்தான பெருமையை தரக் கூடியது .இ ந்திய -அமெரிக்க உறவுகள் உங்களது ஆதரவாலும், தலைமையத்துவத்திலும் மேலும் வலுவடையும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்