இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதாவது, சுலைமானியை கொன்றதன் மூலம், அவரது பயங்கரவாத சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது என்றும், சுலைமானியின் பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது என்றும் ட்ரம்ப் கூறினார். மேலும் இந்த தாக்குதல் போர் ஏற்படுவதற்க்கு அல்ல, போர் ஏற்படாமல் இருப்பதற்க்கு என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அவர், நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொன்றவர் சுலைமானி, மத்திய கிழக்கு நாடுகளை கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் இவர் வைத்திருத்ததார்.இவரின் பயங்கரவாதம்இந்தியாவின் டெல்லி மற்றும் இங்கிலாந்தின் லண்டன் வரை பரந்திருந்ததாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் இவர் இந்தியாவை குறிப்பிட்டது இந்திய மக்கள் மட்டுமின்றி உலக மக்களை திரும்பிப்பார்க்க செய்தது. எனினும்,அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த குற்றச்சாட்டை இந்தியாவுக்கான ஈரான் தூதர் மறுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, கடந்த 2012-ம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் மனைவி சென்ற காரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சுட்டிக்காட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த தாக்குதலானது, ஏற்கனவே ஈரானை சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானியான முஸ்தபா அகமதி ரோஷனை, கார் வெடிகுண்டு தாக்குதலில் இஸ்ரேலியர்கள் கொன்றதாகவும், அதற்கு பழிவாங்கும் வகையில் டெல்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. எனினும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த கருத்துக்கு இந்திய அரசின் சார்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…