இந்தியா மீது தாக்குதல் நடத்தியவர் ஈரான் தளபதி சுலைமானி.. டிரம்ப் புதிய குண்டு.. இந்திய அரசு மவுனம்…

Default Image
  • ஈரானின் இராணுவ தளபதியாக இருந்த குவாசெம் சுலைமானி அமெரிக்காவின் ஏவுகனை  தாக்குதலில் கொல்லப்பட்டார்.
  • இந்த விவகாரத்தில் இந்தியாவையும் சேர்க்கும் அமெரிக்கா.

இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பதாவது, சுலைமானியை கொன்றதன் மூலம், அவரது பயங்கரவாத சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது என்றும், சுலைமானியின் பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டுள்ளது என்றும் ட்ரம்ப் கூறினார். மேலும் இந்த தாக்குதல் போர் ஏற்படுவதற்க்கு அல்ல, போர் ஏற்படாமல் இருப்பதற்க்கு என்றும் குறிப்பிட்டார்.

Image result for soleimani iran

மேலும் அவர், நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களை ஈவு இரக்கமின்றி  கொடூரமாக கொன்றவர் சுலைமானி, மத்திய கிழக்கு நாடுகளை கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் இவர் வைத்திருத்ததார்.இவரின்  பயங்கரவாதம்இந்தியாவின்  டெல்லி மற்றும் இங்கிலாந்தின் லண்டன் வரை பரந்திருந்ததாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் இவர் இந்தியாவை குறிப்பிட்டது  இந்திய மக்கள் மட்டுமின்றி உலக மக்களை திரும்பிப்பார்க்க செய்தது. எனினும்,அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த குற்றச்சாட்டை இந்தியாவுக்கான ஈரான் தூதர் மறுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, கடந்த 2012-ம் ஆண்டில் தலைநகர்  டெல்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் மனைவி சென்ற காரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சுட்டிக்காட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

Image result for delhi bomb blast in israel high commissioner wife death

இந்த தாக்குதலானது, ஏற்கனவே ஈரானை சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானியான  முஸ்தபா அகமதி ரோஷனை, கார் வெடிகுண்டு தாக்குதலில் இஸ்ரேலியர்கள் கொன்றதாகவும், அதற்கு பழிவாங்கும் வகையில் டெல்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. எனினும், அமெரிக்க அதிபர்  ட்ரம்பின் இந்த  கருத்துக்கு இந்திய அரசின் சார்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்