இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.!
- நேற்று இரவு அமெரிக்கா அதிபரான டொனால்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.
- இதையெடுத்து தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அஹமதாபாத் வந்தடைந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்தார். ட்ரம்புடன் அவரின் குடும்பத்தினரும் வந்து உள்ளனர். இந்தியாவிற்கு முதல் முதலாக வரும் டிரம்ப் இன்று , நாளை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அதிபர் ட்ரம்ப் பார்வையிடும் தாஜ்மஹால், டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் துணை ராணுவ படையினர், போலீஸார் பலத்த பாதுகாபுடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அமெரிக்கா அதிபரான டொனால்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார். இதையெடுத்து தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அஹமதாபாத் வந்தடைந்தார்.
சில மணி நேரத்திற்கு முன் அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்பதற்காக அகமதாபாத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.