பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கெளதம் அதானி மீது அமெரிக்க மருத்துவர் வழக்குப்பதிவு!!
ரிச்மண்டைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் நிபுணர் டாக்டர் லோகேஷ் வுயுரு, பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தொழிலதிபர் கெளதம் அதானி, உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் தலைவருமான பேராசிரியர் கிளாஸ் ஸ்வாப் ஆகியோர் மீது அமெரிக்காவில் ஊழல் மற்றும் பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளார்.
கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் இந்த தலைவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. மே 24 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஜூலை 22 அன்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆகஸ்ட் 2 அன்று சுவிட்சர்லாந்தில் டாக்டர் ஷ்வாப் சம்மனைப் பெற்றார். ஆகஸ்ட் 4 அன்று நீதிமன்றம் சம்மன் இ ந்திய தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்திய-அமெரிக்க மருத்துவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவர்கள் அமெரிக்காவிற்கு பணப் பரிமாற்றம் செய்வதாகவும், எதிரிகளுக்கு எதிராக பெகாசஸைப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எந்த ஆவண ஆதாரமும் இல்லாமல் மோடி, ரெட்டி மற்றும் அதானி மீது குற்றம் சாட்டியதால், இந்த மனுவை டெட் ஆன்-அரைவல் வழக்கு என்று இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் ரவி பாத்ரா விவரித்தார்.