உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 27370 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,97,458 ஐ எட்டியுள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,373 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 19 உயிரிழந்துள்ளனர். மேலும் 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 64 நாடுகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடியை அமெரிக்க அரசு ஒதக்கீடு செய்துள்ளது. இதில், இந்தியாவிற்கு கூடுதல் பொருளாதார நிதியாக ரூ.21 கோடி அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சீனா, இத்தாலி ஆகிய நாடுகளை விட அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடத்திற்கு சென்றுள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் கடுமையாக திணறி வரும் அதிபர் டிரம்ப், உலகின் பணக்கார மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளார்.
இந்த அவசர சட்டத்தால் 40 சதவீத மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். லட்சக்கணக்கான கடைகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. விமானம், ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கார் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 30 லட்சம் பேர் வேலை இழந்து, வேலையின்மை சலுகையை பெற அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு உலக பொருளாதார இழப்பு காரணமாக அமெரிக்காவில் வேலையை இழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது 5 மடங்கு அதிகம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் நிதியை ஒதுக்க ஜி20 கூட்டமைப்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…