இந்தியாவிற்கு கூடுதல் பொருளாதார நிதியாக ரூ.21 கோடி அமெரிக்கா ஒதுக்கீடு.!

Default Image

உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 27370 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,97,458 ஐ எட்டியுள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,373 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 19 உயிரிழந்துள்ளனர். மேலும் 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 64 நாடுகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடியை அமெரிக்க அரசு ஒதக்கீடு செய்துள்ளது. இதில், இந்தியாவிற்கு கூடுதல் பொருளாதார நிதியாக ரூ.21 கோடி அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சீனா, இத்தாலி ஆகிய நாடுகளை விட அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடத்திற்கு சென்றுள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் கடுமையாக திணறி வரும் அதிபர் டிரம்ப், உலகின் பணக்கார மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இந்த அவசர சட்டத்தால் 40 சதவீத மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். லட்சக்கணக்கான கடைகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. விமானம், ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கார் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 30 லட்சம் பேர் வேலை இழந்து, வேலையின்மை சலுகையை பெற அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு உலக பொருளாதார இழப்பு காரணமாக அமெரிக்காவில் வேலையை இழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது 5 மடங்கு அதிகம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் நிதியை ஒதுக்க ஜி20 கூட்டமைப்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்