பாதிக்கப்பட்ட பழங்குடியினரின் காலை கழுவி மரியாதை செய்தார் முதலமைச்சர் சிவராஜ் சிங்.
மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் உள்ள குப்ரி கிராமத்தில் பாஜக தலைவர் பிரவேஷ் சுக்லா, போதையில் பழங்குடியினரின் முகத்தில் சிறுநீர் கழித்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிலையில் முதலமைச்சரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து காவல்துறையினர் பிரவேஷ் சுக்லாவை கைது செய்தனர். அதன்பின் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த அவரது வீட்டையும் அதிகாரிகள் புல்டோசர்கள் மூலம் இடித்தனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் தஷ்ரத் ராவத்தை தனது இல்லத்திற்கு அழைத்து பேசிய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், அவரிடம் மன்னிப்புக் கேட்டு அவருடைய கால்களை கழுவி மரியாதை செலுத்தியுள்ளார். இதற்கிடையில் எதிர்கட்சினர் பழங்குடியினரை அவமதித்தது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…