சிறுநீர் கழித்த சம்பவம்! ஏர் இந்தியா சி.இ.ஓ மன்னிப்பு.. பணியாளர்கள், விமானி பணி நீக்கம்!
விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஏர் இந்தியா சிஇஓ மன்னிப்பு.
நியூயார்க்கிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த சங்கர் மிஸ்ரா என்பவர், தனது அருகில் அமர்ந்திருந்த பெண் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண் மீது சிறுநீர் கழித்த நபரை விமான பயண செய்ய தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா என்பவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சிறுநீர் கழித்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா சிஇஓ மன்னிப்பு கேட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், நியூயார்க்-டெல்லி விமானத்தில் பெண் மீது குடிபோதையில் ஆண் பயணி சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக விமானி மற்றும் 4 கேபின் பணியாளர்களை ஏர் இந்தியா பணியிலிருந்து நீக்கியுள்ளது.
விமான ஊழியர்களுக்கு ஷோ காரணம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் தெரிவித்தார். மேலும், விமானத்தில் மதுபான சேவை உள்ளிட்டவை பிற அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.