சிறுநீர் கழித்த வழக்கு – குற்றவாளிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!
ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த வழக்கில் குற்றவாளிக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிப்பு.
ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ராவை, 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த நவம்பர் மாதம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் குடிபோதையில் வயதான பெண்மணி மீது சிறுநீர் கழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இன்று காலை பெங்களூருவில் சங்கர் மிஸ்ரா டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.