இன்று நடைபெறவிருந்த உத்தரப்பிரதேச ஆசிரியர் தகுதித் தேர்வு (UPTET) தேர்வு தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதாவது நவம்பர் 28ஆம் தேதி நடைபெற இருந்த UPTET தேர்வு தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் வாட்ஸ்அப்பில் கசிந்துள்ளது. இதனால், இரண்டு ஷிப்ட்டுகளில் நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல் ஷிப்ட காலை 10 மணி முதல் 12:30 மணி வரை 2554 மையங்களிலும், 2-ஆம் ஷிப்ட் பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5 மணி வரை 1754 மையங்களில் நடைபெற இருந்தது. காகிதம் கசிந்த செய்தி வெளியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் எஸ்டிஎஃப் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் பிறகு பிரயாக்ராஜ், மீரட் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் பலர் பிடிபட்டனர்.
லக்னோவில் இருந்து 4 பேர், ஷாம்லியில் 3 பேர், அயோத்தியில் 2 பேர், கௌசாம்பியில் 1 பேர் மற்றும் பிரயாக்ராஜில் 13 பேரை எஸ்டிஎஃப் ( STF) போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மாநிலத்தைச் சேர்ந்த 13,52,086 பேர் தேர்வெழுத உள்ளனர். உத்தரபிரதேச அரசு ஒரு மாதத்திற்குள் மீண்டும் தேர்வை நடத்தும் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜி பிரசாந்த் குமார் தெரிவித்தார். இருப்பினும், மறுதேர்வு எழுதுவதற்கு விண்ணப்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
இதற்காக, விண்ணப்பதாரர்கள் updeled.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய அறிவிப்பைப் பார்க்க வேண்டும். முன்னதாக, 2019 இல் நடைபெற்ற UPTET தேர்வில் 16 லட்சம் விண்ணப்பதாரர்களும், 2018 இல் நடைபெற்ற தேர்வில் சுமார் 11 லட்சம் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்து இருந்தனர். முதல் முறையாக UPTET தேர்வில் 13 லட்சம் தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…