UPTET 2021: தேர்வு தாள் கசிவு காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து..!

Default Image

இன்று நடைபெறவிருந்த உத்தரப்பிரதேச ஆசிரியர் தகுதித் தேர்வு (UPTET) தேர்வு தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதாவது நவம்பர் 28ஆம் தேதி நடைபெற இருந்த UPTET தேர்வு தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் வாட்ஸ்அப்பில் கசிந்துள்ளது. இதனால்,  இரண்டு ஷிப்ட்டுகளில் நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதல் ஷிப்ட காலை 10 மணி முதல் 12:30 மணி வரை 2554 மையங்களிலும், 2-ஆம் ஷிப்ட் பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5 மணி வரை 1754 மையங்களில் நடைபெற இருந்தது. காகிதம் கசிந்த செய்தி வெளியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் எஸ்டிஎஃப் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் பிறகு பிரயாக்ராஜ், மீரட் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் பலர் பிடிபட்டனர்.

லக்னோவில் இருந்து 4 பேர், ஷாம்லியில் 3 பேர், அயோத்தியில் 2 பேர், கௌசாம்பியில் 1 பேர் மற்றும் பிரயாக்ராஜில் 13 பேரை எஸ்டிஎஃப் ( STF) போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மாநிலத்தைச் சேர்ந்த 13,52,086 பேர் தேர்வெழுத உள்ளனர். உத்தரபிரதேச அரசு ஒரு மாதத்திற்குள் மீண்டும் தேர்வை நடத்தும் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜி பிரசாந்த் குமார் தெரிவித்தார். இருப்பினும், மறுதேர்வு எழுதுவதற்கு விண்ணப்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

இதற்காக, விண்ணப்பதாரர்கள் updeled.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய அறிவிப்பைப் பார்க்க வேண்டும். முன்னதாக, 2019 இல் நடைபெற்ற UPTET தேர்வில் 16 லட்சம் விண்ணப்பதாரர்களும், 2018 இல் நடைபெற்ற  தேர்வில் சுமார் 11 லட்சம் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்து இருந்தனர். முதல் முறையாக UPTET தேர்வில் 13 லட்சம் தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்