யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு..! காரணம் இதுதான்

UPSC Exams: மக்களவை தேர்தலையொட்டி யூ.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வு (2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. யூ.பி.எஸ்.சி. தேர்வு மே மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Read More – நாடாளுமன்றத் தேர்தல்: 5 தலைப்புகள் கீழ் 25 காங்கிரஸ் வாக்குறுதிகள்.!

இந்த நிலையில் தேர்வானது ஜுன் மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது.

Read More – இந்திய பெருங்கடலில் கடற்கொள்ளையர்கள்.. பிரதமர் மோடி உறுதி!

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசு தேர்வாணையம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்