யு.பி.எஸ்.சி, ஐ.எஃப்.எஸ் முதன்மை தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது, தேர்வு எழுதுபவர்கள் கருப்பு நிற பேனாவை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IFS இந்திய வன சேவைக்கான முதன்மை தேர்வு அட்டவணை இன்று தேர்வாணையம் தனது அதிகாரபூர்வ இணையத்தளமாகிய https://upsc.gov.in/ -இல் வெளியிட்டுள்ளது. இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி பிப்ரவரி 28 முதல் மார்ச் 7 வரை தேர்வுகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. காலியாக உள்ள 90 இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தேர்வாணையத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, முதல்கட்டமாக நடைபெறும் தேர்வுகள் காலை 9 மணி முதல் 12 வரையும், இரண்டாம் கட்ட தேர்வுகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதும் தேர்வர்கள் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், நீல நிறம், சிவப்பு நிறம் கொண்ட பேனாக்கள் உபயோகப்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பென்சில் மற்றும் மை பேனாக்கள் வைத்து எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…