UPSC: நாடு முழுவதும் 2023-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி இறுதி தேர்வு முடிவுகளை வெளியிட்டது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு சிவில் சர்வீசஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானார்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
குடிமைப் பணிக்கான தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. இதில் அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படும். அந்தவகையில், 2023ம் ஆண்டு மே 28ஆம் தேதி குடிமைப் பணிக்கான முதல்நிலை தேர்வு மற்றும் செப்டம்பர் மாதம் மெயின் தேர்வு நடைபெற்றது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இந்தாண்டு ஜனவரி முதல் நேர்காணல் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி இறுதி தேர்வு முடிவான நேர்காணல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய ஆட்சிப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய காவல் பணி, மத்தியப் பணிகள், குழு ‘ஏ’ மற்றும் குழு ‘பி என நாடு முழுவதும் மொத்தம் 1,143 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், தேர்ச்சி பெற்ற 1,143 பேரில் 1016 பேர் நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பொது பிரிவில் 347 பேர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பிரிவில் 115 பேர், ஓபிசி பிரிவில் 303 பேர், எஸ்சி பிரிவில் 165 பேர், எஸ்டி பிரிவில் 86 பேர் என மொத்தம் 1016 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் ஆண்கள் 664 பேர் மற்றும் பெண்கள் 352 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், யுபிஎஸ்சி தேர்வு முடிவில் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதல் இடமும், அனிமேஷ் பிரதான் 2வது இடமும், டொனுரு அனன்யா ரெட்டி 3வது இடமும் பிடித்துள்ளனர். யுபிஎஸ்சி இறுதி தேர்வு முடிவுகளை https://upsc.gov.in/ மற்றும் www.upsconline.nic.in என்ற இணையத்தளத்தில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…