யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு!
இந்திய ஆட்சிப் பணிகளில் சேர நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு தேதிகளை இன்று UPSC அறிவித்துள்ளது.

டெல்லி: நடப்பு ஆண்டிற்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
IAS, IFS, IPS உள்ளிட்ட 23 பதவிகளுக்கு இன்று (ஜனவரி 22) முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மொத்தம் 979 குடிமைப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நாட்டின் மிக உயரிய பதவிகளுக்கான இந்தத் தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்கள் https://upsconline .gov.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025