பதவிக் காலம் முடியும் முன்பே யு.பி.எஸ்.சி. தலைவர் திடீர் ராஜினாமா!
யுபிஎஸ்சி : மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய (UPSC) தலைவரான மனோஜ் சோனி, தனிப்பட்ட காரணங்களுக்காக, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பதவி விலகியுள்ளார்.
2017இல் UPSC உறுப்பினரான சோனி, 2023 மே 16இல் தலைவரானார். பதவிக்காலம் நிறைவடைய இன்னும் 5 ஆண்டுகள் மீதமுள்ள நிலையில் குடியரசுத் தலைவரிடம் ஒரு மாதத்திற்கு முன்பு ராஜினாமா கடிதத்தை அளித்து விட்டதாக கூறப்படுகிறது. அது ஏற்கப்பட்டதா, இல்லையா என தெளிவாகவில்லை. ஆன்மிக தொண்டு புரிய பதவி விலகியதாக கூறப்படுகிறது
சோனியின் ராஜினாமா முடிவிற்கும், அரசாங்கப் பதவிகளைப் பெறுவதற்காக UPSC வேட்பாளர்கள் போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சமீபத்திய சர்ச்சைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது.
UPSC-யில் பணிபுரிவதற்கு முன்பு, மனோஜ் சோனி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்களில் மூன்று முறை துணைவேந்தராக பணியாற்றினார். 2005 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் வதோதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் (MSU) துணைவேந்தராக அவர் நியமிக்கப்பட்டார். 2015 வரை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்த பல்கலைக்கழகத்தின் (BAOU) வேந்தராகவும் பணியாற்றினார்.