UPPCL Recruitment: ஜூனியர் இன்ஜினியர் தேவை., ரூ.44,900 வரை சம்பளம்., அறிய வாய்ப்பு.!

Default Image

யுபிபிசிஎல் கலியாகவுள்ள ஜூனியர் இன்ஜினியர் பதவிகளுக்கு பணியமர்த்தும் பணி நடைபெறுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 28, 2020 ஆகும்.

உத்தரபிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், யுபிபிசிஎல் (UPPCL) காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் இடங்களுக்கு பணியமர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. தகுதியுள்ள, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் யுபிபிசிஎல் –  https://upenergy.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த ஜூனியர் இன்ஜினியர் இடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 2020 டிசம்பர் 28 அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். இந்நிறுவனத்தில் கலையாக உள்ள 212 இடங்களுக்கு ஆள்சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், தேர்வு செயல்முறை மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களது தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

UPPCL JE ஆள்சேர்ப்பு 2020: முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி: டிசம்பர் 4, 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 28, 2020
தேர்வு தேதி: பிப்ரவரி 2021

காலியிட விவரங்கள்:

JE (Electrical): 191

ஜே.இ (எலெக்ட்ரானிக்ஸ் / தொலைத்தொடர்பு): 21

கல்வி தகுதி:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் / தொலைத்தொடர்பு ஆகிய இரண்டிற்கும் தொடர்புடைய டிபார்ட்மெண்டில் விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுகள் டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே பாருங்கள். 

வயதுவரம்பு:

18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.44,900 வரை.

தேர்வுமுறை:

கணினி அடிப்படையிலான சோதனைக்கு மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வாரணாசி, கோரக்பூர், கான்பூர், பரேலி, லக்னோ காஜியாபாத், நொய்டா / கிரேட்டர் நொய்டா மற்றும் மீரட் போன்ற நகரங்களில் நடத்தப்படும்.

தேர்வு மொத்தம் 200 மதிப்பெண்களுடன் 3 மணி நேர கால அவகாசம் வழங்கப்படும். மொத்தம் 200 கேள்விகளைக் கொண்டிருக்கும். அதில் 150 கேள்விகள் டிப்ளோமா நிலை பொறியியலில் இருந்து வரும் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

எஸ்சி / எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.700 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். முன்பதிவு செய்யப்படாத பிரிவினர் ரூ.1000 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். உ.பி. மாநிலத்தைத் தவிர வேறு விண்ணப்பதாரர்கள் ரூ.1000 செலுத்த வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்