சதமடிக்கும் இஸ்ரோ… அடுத்த பாய்ச்சல் குறித்த அப்டேட்.! நாளை மறுநாள் விண்ணில் பாயும் GSLV-F15 ராக்கெட்!

GSLV-F15 -ISRO

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 100வது ஏவலுக்கு தயாராகி வருகிறது. ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் நாளை மறுநாள் (29ம் தேதி) விண்ணில் செலுத்த தயாராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதாவது, என்விஎஸ்-02 என்ற செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்15 ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ நேற்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின், 2வது ஏவுதளத்திலிருந்து, நாளை மறுநாள் காலை 6.30 மணியளவில் NVS-2 என்ற செயற்கைக்கோளுடன், GSLV-F15 ராக்கெட் விண்ணில் பாய உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.  இது இஸ்ரோவின் 100வது ராக்கெட் என்பது பெருமைக்குரியது.


இதன் எடை 2,250 கிலோ மற்றும் இது 3 கிலோவாட் வரை ஆற்றலைக் கையாளும். இதில் L1, L5 மற்றும் S பேண்டுகளில் வழிசெலுத்தல் பேலோடுகள் மற்றும் சி-பேண்டில் உள்ள பேலோடுகள் ஆகியவை அடங்கும். NavIC என்பது இந்தியாவுக்கு சொந்தமான செயற்கைக்கோள் அமைப்பாகும், இது அமெரிக்க GPS போன்று செயல்படுகிறது. இது நிலை, வேகம் மற்றும் நேரம் (PVT) சேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு இந்தியாவிற்குள்ளும் மற்றும் இந்திய நிலப்பரப்பைத் தாண்டி 1,500 கிமீ வரை செல்கிறது. அதன்படி, இது இரண்டு வகையான சேவைகளை வழங்குகிறது, ஒன்று ஸ்டாண்டர்ட் பொசிஷனிங் சர்வீஸ் (SPS), இது 20 மீட்டருக்கும் குறைவான நிலை துல்லியத்தை வழங்குகிறது. மற்றொன்று, குறிப்பிட்ட வழிசெலுத்தல் திறன்களுக்காக வடிவமைக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட சேவை (RS) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்