கொல்கத்தாவிலுள்ள ஜல்பைக்குரி மருத்துவமனையில் தினமும் 40 முதல் 50 குழந்தைகள் வரை உடல்நல குறைவால் அனுமதிக்கப்படுவதாக சுகாதர அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஜல்பைகுரி என்னும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல வார்டில் கடந்த நான்கு நாட்களாக தினமும் 40 முதல் 50 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கூடிய 90 சதவீத குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும், தற்போது இந்த குழந்தைகள் புதிதாக பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பலருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த குழந்தைகளுக்கு மலேரியா மற்றும் டெங்கு சோதனைகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிக அளவில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதால் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாகவும், இதனை போக்குவதற்காக புதிதாக வார்டு கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நோய் பரவலுக்கு இன்புளூயன்சா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…