உ.பி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் 2வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.!
உத்தரபிரதேசத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இரண்டாம் கட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. சுமார் 1.92 கோடி வாக்காளர்கள் இதில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கபப்ப்டுகிறது.
மீரட், காசியாபாத், பரேலி, ஷாஜஹான்பூர், அலிகார், கான்பூர் நகர் மற்றும் அயோத்தி உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மேயர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், இரு கட்ட வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெற இருக்கிறது.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை வெளிப்படுத்த முயற்சிப்பதால் இந்த கருத்துக்கணிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.