உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.,க்கள் , 8 போலீசார் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிய கான்பூர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில் உ.பி போலீசார் உறுதி செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை ஆகிய வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபே ரவுடியை பிடிக்கச் சென்ற போலீசார் மீது ரவுடி கும்பல் ஆனது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில் ஒரு டி.எஸ்.பி., 3 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 8 போலீசார் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 போலீசார் படுகாயம் அடைந்தனர். இந்நிகழ்வு அம்மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் தலைமறைவான ரவுடி விகாஷ் துபேயை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நகரில் நேற்று பிடிபட்டார். மேலும் துபேயின் கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபேவை இன்று காலை போலீசார் காரில் அழைத்து வந்துள்ளனர்.
அவ்வாறு காரில் அழைத்து வரும் போது மழையால் பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவ்விபத்தை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்பிக்க முயன்ற போது போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதாகவும், துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ரவுடி விகாஸ் துபே மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் போலீசாரிடமிருந்து தப்பியோடிய விகாஸ் துபே என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு மரணம் அடைந்த தாக உத்திர பிரதேச காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…