நொய்டா போலீசார் பிரியங்கா காந்தியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளனர்.
முதலில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி :
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற, ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர். அங்கு ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த ராகுல்காந்தியை போலீசார் வழிமறைத்தனர்.ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, விதிகளை மீறியதாக அவர்களை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.
இரண்டாவது முறையாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் பயணம் :
இதனைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக , ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் உயிரிழந்த அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றபோது அவர்களை டெல்லி-நொய்டா சாலையில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
போலீசார் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு :
அனுமதி மறுத்த நிலையில் , அந்த சமயத்தில் போலீசார் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் என இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அப்போது இதைக்கண்ட பிரியங்கா காந்தி, உடனடியாக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என போலீசாரின் லத்தியை கையால் தடுத்தார்.
பிரியங்காவின் குர்தாவை பிடித்த போலீசார் :
போலீசார் ஒருவர் அவரின் குர்தாவை பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினார்.இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.போலீசார் இவர்களை தடுத்து நிறுத்திய நிலையில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டது .
ஆறுதல் கூறிய ராகுல்காந்தி ,பிரியங்கா காந்தி :
பின்னர், ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேர் செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உயிரிழந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேர் சென்றனர்.அங்கு அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்கள்.
பிரியங்கா காந்தியிடம் மன்னிப்பு கோரிய போலீசார் :
இந்நிலையில் நொய்டா போலீசார் பிரியங்கா காந்தியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நொய்டா போலீசார் உறுதி அளித்துள்ளனர்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…