காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த பெண் முன் தவறாக நடந்து கொண்ட காவலர்.!
உத்திரபிரதேசம் பட்னி காவல் நிலைய அதிகாரி பெண் முன் தவறாக செய்யும் வீடியோ தற்போது சமூகவலையத்தளத்தில் வைரலாகியுள்ளது.
காவல் நிலையத்தில் நிலத் தகராறு தொடர்பாக புகார் அளிக்க ஒரு பெண் காவல் நிலையத்திற்கு அடிக்கடி சென்று வருவதாக கூறபடுகிறது பட்னி காவல் நிலையத்தின் அதிகாரி பீஷ்ம் பால் சிங், காவல் நிலையத்தில் அந்தபெண் புகாரின் அளிக்கபோது அவர் முன் தவறாக நடந்துகொண்டுள்ளார்.
அந்த பெண் காவல்துறை அதிகாரியின் ஆபாசமான செயல்களால் மனமுடைந்து போனதால் மறைக்கப்பட்ட கேமராவிலிருந்து வீடியோவாக படம்பிடித்துள்ளார். அதன் பின் வீடியோ வைரலாகிய பரவியது.
இந்த சம்பவத்தின் வீடியோ அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது உடன் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊர் மக்கள் கேற்றுக்கொண்டுள்ளனர். புகார் அளிக்க தனது அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அந்த அதிகாரி அவர் முன் தவறாக நடந்து கொண்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
புகாரின் பேரில் தியோரியா எஸ்பி, அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று எஸ்பி கூறியுள்ளார்.
புகார் அளித்த பெண் கூறுகையில் நான் அவரின் தவறான நடத்தையை 2 முதல் 3 முறை தடுத்தேன். நில மோதலில் அவர் என் வழக்கை பதிவு செய்ய விரும்பினேன் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த பெண்ணின் உறவினர்கள் இந்த செயலை எதிர்கொண்டதால் இதை நான் வீடியோவாக எடுக்க முடிவு செய்தேன் என்று அந்த பெண் கூறினார்.
இந்நிலையில் தவறு செய்த அதிகாரி சலேம்பூர் கோட்வாலி காவல் நிலையத்தில் இருந்து இரண்டு நாட்கள் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, தியோரியா எஸ்.பி. பட்னி காவல் நிலையத்தை பார்வையிட்டார் என்பது குறிப்பிடதக்கது.